Home » Syllabus

Syllabus

ஈமானிய்யாவின் கலைத்திட்டம்

ஈமானிய்யாவின் கலைத்திட்டம்கலைத்திட்டத்தின் நோக்கம்

1. தூய இஸ்லாமிய மார்க்கத்தின் வஹியின் மூலம்; பெறப்பட்ட பண்பாடுகளை, மார்க்கப் போதனைகளைப் பின்பற்றுகின்ற, கற்றுக் கொடுக்கக் கூடிய அறிஞர்களை உருவாக்குதல்2. தஃவாப் பணியை சிறப்பாக – வினைத்திறன் மிக்கதாக நடைமுறைப்படுத்த நவீனகாலத் தோடு தொடர்புபட்ட கற்கை நெறிகளோடு (ஐவுஇ டுயபெரயபந ளமடைடள) இணைந்து செல்லல்.

கலைத்திட்டத்தின் ஒழுங்கமைப்புஎமது கலைத்திட்டமானது ஏக காலத்தில்கு ஆழமான ஷரீஆத் துறையின் அறிவுகு சமகாலத்தில் இலங்கை அரசாங்க அங்கீகாரம் பெற்ற கற்கை நெறிகள்கு ஆளுமையை வளர்க்கக் கூடிய பன்மொழிக் கற்கை நெறிகு தகவல் தொழிநுட்பக் கற்கை நெறிகள்என்பவற்றை உள்ளடக்கியதாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதில் ஷரீஆ கற்கை நெறிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பொறி முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

(அ) ஹிப்ழ் பிரிவு (குர்ஆன் மனனப் பிரிவு)

நுழைவுக்கான தகைமைகள் :

1. தரம் 6 இல் சித்தியடைந்திருத்தல்2. 12 வயதைத் தாண்டாதிருத்தல்3. அல்குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்4. நேர்முகப் பரீட்சை, எழுத்துப் பரீட்சையில் தெரிவாகியிருத்தல்5. 5ஆம் தரப் புலமைப் பரீட்சையில் 70 புள்ளிகளுக்குமேல் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இப்பிரிவில்
1. அரபு மொழியும் அதன் இலக்கணமும்2. தர்பிய்யா3. தஜ்வீத்4. தமிழ் மொழி5. ஆங்கிலம்6. சிங்களம்7. கணிதம் ஆகிய பாடங்கள் போதிக்கப்படுகின்றன.

(ஆ) ஷரீஆப் பிரிவு

நுழைவுக்கான தகைமைகள் :
1. வயதெல்லை – 14 முதல்-2. தரம் 09இல் சித்திபெற்றிருத்தல்3. அல்குர்ஆனை ஓரளவாவது ஓதத் தெரிந்திருத்தல்4. தமிழ் அல்லது சிங்கள மொழியை வாசித்து கிரகிக்கும் திறன்5. நேர்முகப் பரீட்சை, எழுத்துப் பரீட்சையில் தெரிவாகியிருத்தல்6. ஹாபிழ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.கற்கைக் காலம்

இக்கலைத்திட்டம் 7 வருடங்களைக் கொண்டது. இதில் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படும். அரபு மொழி

1.  சொல் இலக்கணம்2. இலக்கணம்3. எழுத்துப் பயிற்சி4. வாசிப்புப் பயிற்சி5. இலக்கியம்6. கவிதை யாப்பிலக்கணம் அல்குர்ஆனும் அதன் கலைகளும் 1. தஜ்வீத்2. குர்ஆன் மனனம்3. தப்ஸீர்4. உலூமுல் குர்ஆன் ஹதீஸ{ம் அதன் கலைகளும் 1. ஹதீஸ்2. உஸ_லுல் ஹதீஸ் பிக்ஹ{ம் அதன் கலைகளும் 1. பிக்ஹ்2. பிக்ஹின் அடிப்படைகள்3. இஸ்லாமிய வங்கிமுறை4. பராஇல் அகீதா நம்பிக்கைக் கோட்பாடுகள் 1. இஸ்லாமிய அகீதா2. மத ஒப்பீட்டாய்வு3. தர்க்கவியல் இஸ்லாமிய வரலாறு 1. ஸீரதுன் நபவிய்யா2. தாரீகுல் இஸ்லாமி தர்பிய்யா இஸ்லாமிய்யா என்பனவும் ஆழமாகக் கற்பிக்கப்படுகின்றன. இது தவிர, தமிழ் மொழி, ஆங்கில மொழி, உருது மொழி, கணிதம், விஞ்ஞானம், வரலாறு, சுகாதாரம், தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களும் கற்பிக்கப்படுவதோடு வெளிநாட்டு இஸ்லாமியப் பல்கலைக் கழகங்களுக்கும் உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் பட்டப் படிப்புக்கும் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.

 

கலைத்திட்டத்தின் அடைவுகள்
1. கற்கை நெறியின் முடிவில் மாணவர்கள் அடிப்படை இஸ்லாமியக் கலைகளான அல் குர்ஆன், அல்ஹதீஸ், அல்பிக்ஹ், அல் அகீதா, அத்தாரீக் மற்றும் உஸ_ல்கள் என்பவற்றில் ஆழமான தெளிவுடையவர்களாகவும் அவற்றை தேவையான இடங்களில் பிரயோகிக்கக் கூடியவர்களாக வும் இருப்பர்.

2. அரபு, ஆங்கிலம், தமிழ், சிங்களம், உருது ஆகிய மொழிகளில் ஆக்கங்களை வாசித்து விளங்கவும், பேசவும் உரை நிகழ்த்தவும் கட்டுரைகள், ஆக்கங்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் திறன் பெற்றிருப்பர். அவ்வாறே அரபு மொழி இலக்கண நுட்பங்கள் பற்றிய தெளிவுடையவர்களாகவும் இருப்பர்.

3. தஃவாப் பணியில் அனுபவம் உள்ளவர்களாகவும் இருப்பர்.

 

4. ஆழமான ஈமான், இபாதத், சிறந்த குணப் பண்புகள், வாழ்க்கை விவகாரங்களில் பேணுதல், தீனுக்காகவே வாழும் சிறந்த ஆன்மீகப் பண்புகள் என்பவற்றைப் பெற்றிருப்பர். 5. தகவல் தொழிநுட்பம் சார் திறமையை தஃவாவுக்குப் பயன்படுத்தல். பன்மொழிப் புலமைஉலகில் அன்றாடம் வெளியிடப்படும் புத்தகங்களில் பெரும்பான்மையானவை மொழிபெயர்ப்பு நூல்களே. இஸ்லாமிய நூல்களாயினும் இதுவே யதார்த்தமாகும். பன்மொழிப் புலமைக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஈமானிய்யாவின் கலைத்திட்டம் அமைந்துள்ளது. ஈமானிய்யா பாடத்திட்டத்தின் தனித்துவமான அம்சமாக, பன்மொழிப் புலமையைக் குறிப்பாக அடையாளப்படுத்தி அதற்கான விசேட திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  நோக்கம் அரபு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெறுதல். இது மொழி தொடர்பான பின்வரும் 4 அடிப்படை ஆற்றல்களை விருத்தி செய்யும் வகையில் அமையும்.

1. வாசிப்பு  குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ{ ஏனைய நூற்களை வாசித்து மொழி, இலக்கண ரீதியாகப் பிழையின்றி விளங்கிக்கொள்ளும் திறனைப் பெறல். நான்கு மொழிகளிலும் எழுதப்பட்ட எந்த நூலையும், சஞ்சிகையையும் வாசித்து விளங்கும் ஆற்றல். கூட்டங்களில் அறிக்கை வாசித்தல் போன்ற உரத்து வாசிக்கும் திறனைப் பெறல்.

2. பேச்சு    அன்றாட வாழ்வில் உரையாடல்களை மேற்கொள்ளல், சிறு சொற்பொழிவுகளை ஆற்றுதல்,வரவேற்புரை, நன்றியுரை போன்ற சம்பிரதாய பூர்வமான நிகழ்ச்சிகளைச் செய்தல்

 

3. எழுத்து நிர்வாகத் துறை சார்ந்த எழுத்தாற்றல். உதாரணமாக கடிதம், அறிக்கை, நிகழ்ச்சி நிரல், திட்ட அறிக்கை, முதலானவற்றைத் தயாரித்தல். நான்கு மொழிகளிலும் ஷரீஆத்துறை ஆக்கங்களை எழுதுதல், கட்டுரை எழுதுதல்

4. செவிமடுத்தல்நேரடியாகக் கூறப்படுபவற்றைச் செவிமடுத்துத் தமிழில் திருப்பிக் கூறும் ஆற்றல். உரைகளை மொழிபெயர்க்கும் ஆற்றல்.

 

கற்றல் கற்பித்தல் வழிமுறை1. ஈமானிய்யாவின் கலைத்திட்டமானது பல்வேறு நவீன கற்றல் கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தும் நோக்கில் அதற்கான திட்டத்தை தற்போது தயார் செய்து வைத்துள்ளது.

ஆசிரியர் மையக் கல்விமுதல் 3 வருடங்கள் இதில் மாணவர்கள் முழுமையாக ஆசிரியரில் தங்கியிருக்கும் காலம். திறமையான அனுபவமுள்ள ஆசான்கள் இப்பிரிவில் கல்வி கற்றுக் கொடுப்பது சிறப்பாகும்.  இதில் மாணவர்கள் அறபு, தமிழ், உருது போன்ற மொழிகளின் அடிப்படையைத் திறமையாகக் கற்று அடுத்த நிலைக்கு தம்மைத் தயார்படுத்தல்.

ஆசிரியர், மாணவர் மையக் கல்வி2 வருடங்கள் இப்பிரிவில் ஆசிரியர்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து மாணவர்களுடன் இணைந்து செயல்படுவர். இதில் மாணவர்கள் சுயமாக தேடிப்படிக்கத் தேவையான அனைத்து வழிகளையும் முன்வைப்பர்.

மாணவர் மையக் கல்வி2 வருடங்கள் ஆசிரியர் வழிகாட்டியாக இருந்து மாணவர் சுயமாகத் தேடிப்படிக்க வழிசெய்வதே இம்முறையாகும்.

மாணவர்களின் அடைவுகளும் திறமையும் வெகுவாக அதிகரிக்க இந்த முறை வழி செய்யும்.அரசாங்கப் பாடத்திட்டம்எமது கல்லூரியில் நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் க.பொ.த. சாதாரன தர பரீட்சையில் பின்வரும் பாடங்களில் பரீட்சைக்குத் தோற்றுவர்.

1. இஸ்லாம்

2. அரபு

3. அரபு இலக்கியம்

4. கணிதம்

5.தமிழ்

6.விஞ்ஞானம்

7.வரலாறு

8. ஆங்கிலம்

9.தகவல் தொழில்நுட்பம் (ஐவு)

ஆறாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் பின்வரும் பாடங்களில் பரீட்சைக்குத் தோற்றுவர்.

1. இஸ்லாம்

2. அரபு

3. அரசியல் விஞ்ஞானம் அல்லது  தகவல் தொழில்நுட்பம் (ஐவு)

4. ஆங்கிலம்

முடிவுரை
தங்களது பிள்ளைகளைச் சேர்க்கும் மத்ரஸாவின் தரம், அதிலுள்ள வசதிகள், ஆசிரியர்களின் தகைமை, பாடத்திட்டம் பற்றியெல்லாம் தேடி ஆராய்ந்துத் தமது பிள்ளைகளை மத்ரஸாவுக்குச் சேர்க்கும் பெற்றோரின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையிலும், அப்பிள்ளைகளின் ஈருலக வாழ்வும் சுபீட்சம் பெற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுமே எமது கலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.